கோலாலம்பூர்: செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று அறிவித்தார்.
இன்று ஒரு நேரடி தொலைக்காட்சி உரையில் பேசிய பிரதமர், தேசிய மீட்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் மட்டுமே நாடாளுமன்றம் திறக்கப்படும் என்றார்.
பிரதமரின் அறிவிப்பு இன்று முன்னதாக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவுடனான சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை மாமன்னர் சந்தித்து, அவசரநிலை மற்றும் கொவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
ஜனவரி மாதம் மாமன்னர் அவசரநிலை அறிவித்ததை அடுத்து நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இடைநிறுத்தப்பட்டன.