Home நாடு அவசரநிலையின் போது மாமன்னருக்கு அதிக அதிகாரம் உண்டு!

அவசரநிலையின் போது மாமன்னருக்கு அதிக அதிகாரம் உண்டு!

559
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார் என்பது தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கருத்தாகும், ஆனால், அந்த முடிவை மாமன்னர் மறுக்கக்கூடும் என்று துன் மகாதீர் கருதுகிறார்.

அவசரகால நிலை பிரகடனத்திற்குப் பிறகு, மாமன்னரின் அதிகாரம் இன்னும் அதிகமாகிவிட்டது என்று அவர் கூறினார்.

தேசிய புனர்வாழ்வு மன்றத்தை அமைப்பதற்கான அவரது முன்மொழிவைத் தொடர்ந்து இந்த கருத்தை ஆவ்ர் வெளியிட்டார். மே 13 சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டை நிர்வகிக்கும் தேசிய நடவடிக்கை மன்றத்திற்கு (மாகெரான்) ஒத்ததாக இது கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

“அவசரகால நிலை அறிவிக்கப்பட்டவுடன், மாமன்னரின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது, அதாவது மாமன்னர் தலைமை நிர்வாகியாகத் தோன்றுவார். மாமன்னர் குறிப்பிட்டுள்ள சில சிக்கல்களை (சுகாதாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் போன்றவை) சமாளிக்க முடியும், மேலும் பணியைச் செய்ய யாரையும் (நியமிக்க) முடியும்,” என்று அவர் நேற்று சினார் ஹரியானுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கடந்த வாரம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தப் பின்னர், மாமன்னர் இன்று மலாய் ஆட்சியாளர்களுடன் சிறப்புக் கூட்டத்தை நடத்துவார்.

“முதன்முறையாக அரசாங்கம் அவசரகால நிலைமையைக் கேட்டபோது, ​​மாமன்னர் மறுத்துவிட்டார். எனவே அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பிரதமரிடமிருந்தோ ஆலோசனையை ஏற்கவோ நிராகரிக்கவோ மாமன்னருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிகிறது,” என்று துன் மகாதீர் மேலும் கூறினார்.