இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் ஆட்சியாளர்கள் சந்திப்பிற்கு முன்னதாக அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஆகஸ்டு மாதத்தில் முடிய வேண்டிய அவசரகால அமுலாக்கம் குறித்து மாமன்னர் மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த பொறுப்புக்கு தனிப்பட்ட நலன்கள், அரசியல் கட்சிகள் அல்லது தனிப்பட்ட பரிசீலனைகள் இல்லாமல் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். மக்களை பாதிக்கும் மோசமான சூழ்நிலையை சமாளிக்க எங்களுக்கு உதவக்கூடிய ஓர் அரசாங்கத்தை வழிநடத்துவதற்கு, தலைவருக்கு தற்போதைய நிலைமை பற்றிய திறன், பார்வை மற்றும் ஆழமான புரிதல் இருக்க வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.