Home நாடு வாக்குமூலம் அளிக்க வந்தவரை தாக்கவில்லை!- காவல் துறை

வாக்குமூலம் அளிக்க வந்தவரை தாக்கவில்லை!- காவல் துறை

400
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வாரம், வீட்டு வன்முறை குறித்து தமது மனைவி அளித்த புகார் தொடர்பான வாக்குமூலம் அளிக்க வந்தவரை செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை காவல் துறை மறுத்துள்ளது.

சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமட் கூறுகையில், சம்பவம் நடந்த நாளில், காவல் நிலையத்தில் இருந்தபோது தனது மனைவியைக் கண்ட நபர் ஆக்ரோஷமாக தம் மனைவியைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.

காவல் நிலையத்தில் சத்தம் போட வேண்டாம் என்று காவல்துறையினர் அந்த நபருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இருப்பினும் அவர் அதனை புறக்கணித்ததாகவும், காவல் துறையினர் மூடர்கள் என்று கூறியதாகவும் அர்ஜுனைடி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“சந்தேக நபர்களுக்கு எதிரான கைது நடவடிக்கையின் போது, ​​சிறு கைகலப்பு நடந்தது. காவல்துறையினர் குறைந்தபட்ச சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஜோசப் பிரகாஷ் சுகுமாரன், காவல் தலைமையகத்தில் இருந்தபோது தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறியதாக நேற்று ஒரு செய்தித்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

வன்முறை மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் குற்றங்களை உள்ளடக்கிய சந்தேகத்திற்கு எட்டு குற்றப் பதிவுகள் அவர் மீது இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆரம்பக்கட்ட பரிசோதனையில் சந்தேகநபர் போதைப்பொருளுக்கு சாதகமாக இருந்ததாகவும் அர்ஜுனைடி கூறினார்.