கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,150 கொவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 673,026 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மொத்தம் பதிவான 5,150 தொற்று சம்பவங்களில் 5,147 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 3 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7,240-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 600,935-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 67,949 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 924 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 453 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 73-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 4,142-ஆக உயர்ந்திருக்கிறது.
சிலாங்கூரில் அதிகமாக 1,914 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (607), சரவாக் (570), கோலாலம்பூர் (480), ஜோகூர் (392), கிளந்தான் (230), கெடா (228), சபா (184), மலாக்கா (152), லாபுவான் (101) , பினாங்கு (99), பேராக் (66), பகாங் (57), திரெங்கானு (56), பெர்லிஸ் (8), மற்றும் புத்ராஜெயா (6) சம்பவங்கள் பதிவாகி உள்ளன.