கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பை முதலில் கையாள்வதில் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், தற்போதுள்ள அரசியல் நிலைத்தன்மையை கைப்பற்ற நினைக்கக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
கொவிட் -19 பாதிப்பைச் சமாளிக்க நாட்டிற்கு அரசியல் நிலைத்தன்மை தேவை என்பதே இதற்குக் காரணம் என்று ஹிஷாமுடின் கூறினார்.
“இந்த நிலைத்தன்மை நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க அனுமதிக்கும். இந்த நிலைத்தன்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கேள்விகளைக் கேட்கும் உரிமையையும், அமர்வுகளின் போது பதிலளிக்கும் அரசாங்கத்தையும் வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், மிக முக்கியமாக இந்த நிலைத்தன்மை பறிக்கப்படக்கூடாது,” என்று அவர் இன்று தனது இணையதளத்தில் ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
“நான் விரும்பும் இந்த நிலைத்தன்மை என்றென்றும் நிலைக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால், கொவிட் -19 நிறைவடையும் வரைதான்..,” என்று அவர் மேலும் கூறினார்.
அரசியல் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டால் அது தேசிய மீட்புத் திட்டத்தை பாதிக்கும் என்று ஹிஷாமுடின் கூறினார்.
“புதிய ஒன்றை உருவாக்குவதற்கு கூட தேசிய மீட்பு திட்டம் கைவிடப்படுமா? இந்த கடினமான காலங்களில், மலேசியர்களை மற்றொரு அதிகாரப் போராட்டத்திற்குள் இழுத்து விட முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான நிபந்தனைகளை கோடிட்டுக் காட்டும் மீட்புத் திட்டத்தை நேற்று பிரதமர் முஹைடின் யாசின் அறிவித்தார். அத்திட்டம் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.