Home நாடு ஜசெக மாநாடு ஒத்திவைப்பு

ஜசெக மாநாடு ஒத்திவைப்பு

674
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஜசெக கட்சியின் மாநாடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்று ஜசெக தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

ஜசெக கட்சி மாநாட்டை ஒத்திவைக்க வேண்டும் என்ற முறையீட்டின் பேரில், ஜூன் 11 தேதியிட்ட சங்கப் பதிவுத் துறையிடமிருந்து ஜசெக ஒரு கடிதத்தைப் பெற்றதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், அரசியல் கட்சிகள் உட்பட பதிவுசெய்யப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கான வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்துவது போன்றவை கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஒத்திவைக்க வேண்டும் என்று சங்கப் பதிவாளர் முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

“எனவே, ஜசெக கட்சி மாநாட்டின் புதிய தேதியை கட்டுப்பாட்டு ஆணை காலம் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட பின்னரே தீர்மானிக்க முடியும்,” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.