Home உலகம் இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல்

இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல்

628
0
SHARE
Ad

ஜெருசேலம்: பாலஸ்தீன பிரதேசத்திலிருந்து பலூன்களைப் பயன்படுத்தி குண்டுகளை வீசியதால் இஸ்ரேல் புதன்கிழமை காசா மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது.

இந்த தாக்குதல் 11 நாட்களுக்கு முன்பு போர் நிறுத்தம் ஒப்பந்தத்திற்குப் பின்னர் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

காசா நகரத்திலும் கான் யூனிஸின் தெற்கிலும் உள்ள ஹமாஸ் தளங்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. காசாவிலிருந்து தொடர்ந்து வன்முறைச் செயல்களை எதிர்கொள்வதில் புதிய மோதல் உட்பட அனைத்து போராட்டங்களுக்கும் தயாராக உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

காசா எல்லைக்கு அருகே திறந்தவெளிகளில் 20 தீ விபத்து ஏற்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இஸ்ரேலிய தாக்குதலை உறுதிப்படுத்தினார். மேலும் பாலஸ்தீனியர்கள் ஜெருசேலமில் தங்கள் உரிமைகளையும் புனித நிலத்தையும் தைரியமாக பாதுகாப்பார்கள் என்றும் கூறினார்.