Home உலகம் ஈரோ 2020 : வேல்ஸ் 2 – துருக்கி 0

ஈரோ 2020 : வேல்ஸ் 2 – துருக்கி 0

1332
0
SHARE
Ad

பாக்கு (அசர்பைஜான்) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று புதன்கிழமை (ஜூன் 16) நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் வேல்ஸ்-துருக்கி இருநாடுகளும் மோதின.

அசர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இதில் வேல்ஸ் 2-0 என்ற கோல்கணக்கில் துருக்கியைத் தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருக்கும் துருக்கி தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே துருக்கிக்கு எஞ்சியிருக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் வழி ‘ஏ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் வேல்ஸ் இருக்கிறது. 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றிருப்பது இத்தாலி.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

ரஷியா 1 – பின்லாந்து 0

வேல்ஸ் 2 – துருக்கி 0

இத்தாலி 3 – சுவிட்சர்லாந்து 0