Home உலகம் ஈரோ 2020 : ரஷியா 1 – பின்லாந்து 0; உயிர்த்தெழுந்த ரஷியா

ஈரோ 2020 : ரஷியா 1 – பின்லாந்து 0; உயிர்த்தெழுந்த ரஷியா

1047
0
SHARE
Ad

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷியா) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று புதன்கிழமை (ஜூன் 16) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் பின்லாந்து குழுவைத் தோற்கடித்ததன் மூலம் ரஷியா தொடர்ந்து போட்டிகளில் நீடித்திருக்கும் வாய்ப்பைப் பெற்றது.

தனது முதல் ஆட்டத்தில் ரஷியா 3-0 கோல் எண்ணிக்கையில் பெல்ஜியத்திடம் மோசமாகத் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்றைய ஆட்டத்திலும் தோல்வி அடைந்திருந்தால், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் ரஷியா பின்னடைவைச் சந்தித்திருக்கும்.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

ரஷியா 1 – பின்லாந்து 0

வேல்ஸ் 2 – துருக்கி 0

இத்தாலி 3 – சுவிட்சர்லாந்து 0