இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்தைத் தோற்கடித்ததன் வழி இத்தாலிய காற்பந்து இரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது இத்தாலியக் குழு.
இந்த வெற்றியின் மூலம் “ஏ” பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இத்தாலி. இதன் காரணமாக அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் 16 குழுக்களில் ஒன்றாக இத்தாலி தேர்வாகியிருக்கிறது.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:
ரஷியா 1 – பின்லாந்து 0
வேல்ஸ் 2 – துருக்கி 0
இத்தாலி 3 – சுவிட்சர்லாந்து 0
Comments