Home நாடு தொற்று வீதம் 1.0-க்கு கீழ் பதிவாகி உள்ளது

தொற்று வீதம் 1.0-க்கு கீழ் பதிவாகி உள்ளது

759
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாடு தழுவிய அளவில் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதால், மலேசியாவில் கொவிட் -19 க்கான தொற்று வீதம் தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு 1.0 க்கு கீழ் பதிவாகி உள்ளது.

ஜூன் 12 அன்று மிகக் குறைந்த தொற்று விகிதம் 0.9 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இது 0.95 ஆக பதிவாகியது. சிலாங்கூர் 0.92- ஆக பதிவு செய்துள்ளது.

கடைசியாக தேசிய தொற்று விகிதம் ஏப்ரலில் 1.0 ஐ விட குறைவாக இருந்தது. இது மே 23 அன்று உச்சத்தை எட்டியது, அப்போது 1.21- ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

சுகாதார அமைச்சகம் நேற்று 5,738 கொவிட் -19 சம்பவங்கள் மற்றும் 60 இறப்புகளை பதிவு செய்தது.