Home நாடு எந்நேரத்திலும் சபா சட்டமன்றம் கூடலாம்!

எந்நேரத்திலும் சபா சட்டமன்றம் கூடலாம்!

578
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கால சூழல் அனுமதித்தால் எந்த நேரத்திலும் மாநில சட்டமன்றம் அமர்வு நடத்த சபா அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சபா மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ காட்ஸிம் யஹ்யாவுடன் நேற்று விவாதித்ததாக சபா முதல்வர் ஹாஜிஜி நூர் தெரிவித்தார்.

“மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லாவின் அறிக்கையைத் தொடர்ந்து மாநில சட்டமன்ற சபாநாயகருடன் கலந்துரையாடினேன். நாங்கள் முதலில் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையைப் பெறுவோம், மேலும் நிர்வாக நடைமுறைகளுக்கு முழுமையாக இணங்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புதன்கிழமை, மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.