Home நாடு டி.நவீன் கொலை வழக்கு : புதிய ஆதாரங்களுக்கு தடை கோரி அரசாங்கத் தரப்பு மனு

டி.நவீன் கொலை வழக்கு : புதிய ஆதாரங்களுக்கு தடை கோரி அரசாங்கத் தரப்பு மனு

533
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : கடந்த 2017 ஜூன் மாதத்தில்  பகடி வதைக்கு ஆளாகி மரணமடைந்த டி.நவீன் மீதான கொலைவழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவற்றை சமர்ப்பிக்க இருப்பதாகவும் சமூக செயற்பாட்டாளர் அருண் துரைசாமி அண்மையில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 18-ஆம் தேதி பினாங்கு உயர்நீதிமன்றத்தில் அரசாங்கத் தரப்பு அந்தப் புதிய தகவல்களுக்கு தடை கோரி மனு செய்யப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.

அருண் துரைசாமி வெளியிட விரும்பிய தகவல் மீது நீதிமன்றத்தில் தடை கோரி மனு செய்யப்பட்டிருப்பதாக ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார். இந்த தடையை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றனர்.

அருண் துரைசாமி
#TamilSchoolmychoice

இந்த தடை கோரும் மனு மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் எனவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். நவீன் குடும்பத்தினரும் சமூக செயற்பாட்டாளர் அருண் துரைசாமியும் இணைந்து “நவீன் நடவடிக்கை மற்றும் புலனாய்வு குழு” (Nhaveen Action and Investigation League” – Nail) என்ற அமைப்பைத் தோற்றுவித்து நவீனுக்கு நீதி கிடைக்க போராடி வருகின்றனர்.

இந்த தடை உத்தரவு கோரும் மனு எதிர்வரும் ஜூலை 28-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றாலும் என்றாலும் தற்போதைய கொலை வழக்கு விசாரணை இடையூறு இல்லாமல் எதிர்வரும் ஜூன் 29-ஆம் தேதி தொடர்ந்து நடைபெறும் என வழக்கறிஞர் ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

2017-ஆம் ஆண்டில் பகடிவதைக்கு ஆளான நவீன் அதன்காரணமாக தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்தார். அவரைக் கொலை செய்ததாக 4 இளைஞர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு  அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதத்தில் பிரவீன் என்ற நவீனின் நண்பரும், நவீன் தாயாரான சாந்தி மற்றும் அவரின் சகோதரர் கருணாகரன் ஆகியோர் இணைந்து காவல்துறையில் புகார் ஒன்றை செய்தனர்.

அந்தப் புகாரில் கொலைக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு இருக்கும் நான்கு பேரைத் தவிர மேலும் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் அந்த புகாரில் தெரிவித்தனர்.

நவீன் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தில் சுமார் 20 பேர் சம்பந்தப்பட்டு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் நடந்தபோது நவீனுடன் பிரவீன் என்ற மற்றொரு மாணவரும் உடன் இருந்ததாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.