Home நாடு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடரும் – பிரதமர் கோடி காட்டினார்

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடரும் – பிரதமர் கோடி காட்டினார்

651
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமையுடன் (ஜூன் 28) முடிவடையும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து நீட்டிக்கப்படும் என பிரதமர் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.

நாட்டில் மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதால் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுகிறது.

பிரதமர் ஏற்கனவே அறிவித்த மீட்சித் திட்டத்தின் இலக்குகள் இன்னும் பூர்த்தியைடையாததாலும் இந்த நீட்டிப்பு தொடர்கிறது.

#TamilSchoolmychoice

ஆனால் எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜூன் 29-ஆம் தேதி பிரதமர் சிறப்பு உதவித் திட்டங்களை மக்களுக்கு அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.