Home நாடு கொவிட்-19: புதிய தொற்றுகள் 5,586 – சிலாங்கூரில் மட்டும் 2,212 தொற்றுகள்!

கொவிட்-19: புதிய தொற்றுகள் 5,586 – சிலாங்கூரில் மட்டும் 2,212 தொற்றுகள்!

1274
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  நாளை திங்கட்கிழமையுடன் (ஜூன் 28) அமுலில் இருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருமா அல்லது தொடரப்படுமா என்ற நிலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 5,586 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையே பிரதமரும் கோடி காட்டியிருக்கிறார்.

நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்து வந்தாலும், கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாகவே இதைவிட மோசமான ஒரு சூழலை நம்மால் தவிர்த்திருக்க முடிகிறது என சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 734,048 ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூர் 2,212 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 628 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 513 தொற்றுகளோடு சரவாக் பிடித்திருக்கிறது.

சிறிய மாநிலமான மலாக்காவும் 380 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.