Home கலை உலகம் “ரஜினியுடன் உரையாடினேன்; நலமாக இருக்கிறார்” – வைரமுத்து தகவல்

“ரஜினியுடன் உரையாடினேன்; நலமாக இருக்கிறார்” – வைரமுத்து தகவல்

917
0
SHARE
Ad

சென்னை : அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து தன்னைத் தொலைபேசியில் அழைத்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் இந்தத் தகவலைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவு இதோ:

 

#TamilSchoolmychoice

ரஜினிகாந்த் அமெரிக்காவில் உள்ள மாயோ கிளினிக் என்ற மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொண்ட விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவரின் மகளுடன் அவர் அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறும் காட்சிகள் சமூக காட்சிகளில் பகிரப்பட்டன.

அதைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, ரஜினி தன்னைத் தொலைபேசியில் அழைத்த விவரத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.