Home கலை உலகம் அமெரிக்கா மாயோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள்

அமெரிக்கா மாயோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள்

673
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆராய்ச்சி மருத்துவமனை மாயோ கிளினிக் எனப்படும் மருத்துவமனையாகும். உலகப் பணக்காரர்கள் பலர் இங்குதான் தங்களின் உடல் நலத்தைப் பரிசோதித்துக் கொள்வது வழக்கம்.

உலகிலேயே சிறந்த மருத்துவப் பரிசோதனைகளைக் கொண்ட மருத்துவமனையாகவும் மாயோ கிளினிக் பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் அங்கு மருத்துவப் பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரும் அவரின் மகள் சௌந்தர்யாவும் அந்த மருத்துவமனையின் முன் நடந்து செல்லும் காட்சியை ஒருவர் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தப் படம் தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தற்போது தொடர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.

அவர் தற்போது நடித்து வரும் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்புகளை ஐதராபாத்தில் முடித்துக் கொண்டு அதற்கான குரல் பதிவுகளையும் (டப்பிங்) முடித்துக் கொண்டு ரஜினி அமெரிக்காவுக்கு கடந்த ஜூன் 19-ஆம் தேதி சென்றுள்ளார்.

அமெரிக்காவில் தனுஷ் தனது குடும்பத்தினருடன் தங்கி ஆங்கிலப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவர் குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கிய பின்னர் ரஜினி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.