Home நாடு கொவிட்-19: புதிய தொற்றுகள் 5,803

கொவிட்-19: புதிய தொற்றுகள் 5,803

861
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்து வருகிறது. கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாகவே இதைவிட மோசமான ஒரு சூழலை நம்மால் தவிர்த்திருக்க முடிகிறது என சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

இன்று சனிக்கிழமை (ஜூன் 26) வரையிலான ஒரு நாளில் நாட்டில் மொத்தம் 5,803 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூர் 2,108 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இன்றைய எண்ணிக்கையைத் தொடர்ர்ந்து இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 728,462 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் 741 தொற்றுகளையும் சரவாக் 491 தொற்றுகளையும் கண்டிருக்கிறது.

கோலாலம்பூர் 628 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.