Home உலகம் ஈரோ 2020 : 8 குழுக்களில் வெற்றி பெறப் போவது யார்?

ஈரோ 2020 : 8 குழுக்களில் வெற்றி பெறப் போவது யார்?

914
0
SHARE
Ad

Euro-2020-8-teams-quarter-finalsஇலண்டன் : எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் ஐரோப்பியக் காற்பந்து கிண்ண வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். இப்போது, கால் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ள 8 நாடுகளின் குழுக்களில் யார் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்ற பரபரப்பான கட்டத்திற்குள் ஈரோ 2020 நுழைந்துள்ளது.

பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உக்ரேன் ஆகியவையே கால் இறுதி ஆட்டத்தில் மோதவிருக்கும் 8 குழுக்கள்.

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 2) மலேசிய நேரப்படி நள்ளிரவில் தொடங்கும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும் ஸ்பெயினும் மோதுகின்றன. இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

மலேசிய நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 3) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் பெல்ஜியம் – இத்தாலி இரண்டு நாடுகளும் மோதுகின்றன. ஜெர்மனியின் மூனிக் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ஐரோப்பியக் கிண்ணத்திற்கான 16 குழுக்கள்

மொத்தம் 24 நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அந்த நாடுகள் ஒரு பிரிவுக்கு 4 நாடு என்ற கணக்கில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 2 குழுக்கள் என்ற அளவில் 12 நாடுகள் 6 பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் சிறந்த 3 இடத்தைப் பெற்ற 4 குழுக்களும் கூடுதலாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்த 16 குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் சனிக்கிழமை ஜூன் 26 முதல் நடைபெற்று வந்தன.

இதில் தற்போது 8 குழுக்கள் அடுத்த கட்டமாக கால் இறுதிச் சுற்றுக்கு செல்கின்றன.

6 பிரிவுகளில் சிறந்த குழுக்களாகத் தேர்வு பெற்ற 6 நாடுகள் பின்வருமாறு:

  1. இத்தாலி
  2. பெல்ஜியம்
  3. நெதர்லாந்து
  4. இங்கிலாந்து
  5. சுவீடன்
  6. பிரான்ஸ்

6 பிரிவுகளில் சிறந்த 2-வது குழுவாகத் தேர்வான 6 நாடுகள் பின்வருமாறு:-

  1. வேல்ஸ்
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. குரோஷியா
  5. ஸ்பெயின்
  6. ஜெர்மனி

பிரிவுகளில் சிறந்த 3-வது குழுவாகத் தேர்வாகும் நாடுகள் :-

  1. சுவிட்சர்லாந்து
  2. செக் குடியரசு
  3. உக்ரேன்
  4. போர்ச்சுகல்

அடுத்து 16 குழுக்களுக்குள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு நடைபெற்று மேற்கண்ட கடைசி 8 குழுக்கள் தேர்வு பெற்றன:

26/06: வேல்ஸ் – டென்மார்க்

26/06: இத்தாலி – ஆஸ்திரியா

27/06: நெதர்லாந்து – செக் குடியரசு

27/06: பெல்ஜியம் – போர்ச்சுகல்

28/06: குரோஷியா – ஸ்பெயின்

28/06: பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து

29/06: இங்கிலாந்து – ஜெர்மனி

29/06: சுவீடன் – உக்ரேன்