Home நாடு பிரதமர் இன்னும் மருத்துவமனையில்….

பிரதமர் இன்னும் மருத்துவமனையில்….

1115
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வயிற்றுப் போக்கு காரணமாக கடந்த புதன்கிழமை  (ஜூன் 30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்னும் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

மொகிதினுக்கு வயிற்றுக் குடல் பகுதியில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இன்னும் தொடர் சிகிச்சையில் மருத்துவமனையில் இருந்து வருவார் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

முழு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு முன்பிருந்த உடல்நலக் குறைவுகள் தொடர்பான பிரச்சனைகள் ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

பிரதமருக்கு ஏற்கனவே வயிற்றுக் குடல் பகுதியில் புற்றுநோய் காரணமாக சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலக் குறைவு அந்த பழைய சிகிச்சை தொடர்பானது அல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அவருக்கான சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையிலும் அவர் தனது பணிகளை மேற்கொள்ள மருத்துவ அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்து வருவார் எனவும் பிரதமர் இலாகாவின் அறிக்கை குறிப்பிட்டது.