பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் விடுத்திருந்த ஓர் அறிக்கைக்கு பதிலளித்த லிம் கிட் சியாங், தனது அறிக்கையைத் தனது வலைத் தளத்தில் பதிவிட்டார்.
இதன் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்படுவதாக ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
பின்னர் தனது அறிக்கைக்கு லிம் கிட் சியாங் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஹாடி அவாங்கின் அறிக்கை குறித்த செய்தியைத், தான் பிரீ மலேசியா டுடே இணைய ஊடகத் தளத்தில் பார்த்து அதன் அடிப்படையில் தவறுதலாக புரிந்து கொண்டதாகவும் லிம் கிட் சியாங் கூறியிருந்தார்.
தவறுதலான புரிதலின் அடிப்படையிலேயே தான் மறுப்பறிக்கை விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் லிம் கிட் சியாங் தெரிவித்திருக்கிறார்.
லிம் கிட் சியாங் விடுத்த அறிக்கைக்கு இணைய வாசிகள் (நெட்டிசன்ஸ்) தங்களின் கடுமையானக் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இஸ்லாத்தையோ, வேறு மத நம்பிக்கையையோ குறித்துக் கேள்வி எழுப்புவது தனது நோக்கமில்லை என்றும் லிம் கிட் சியாங் மேலும் தெரிவித்திருக்கிறார்.
அந்தத் தலைப்பின் அடிப்படையிலேயே லிம் கிட் சியாங்கும் தனது அறிக்கையை விடுத்திருந்தார்.
லிம் கிட் சியாங் தனது அறிக்கையை விடுத்த பின்னர் அவருக்கு ஹாடியின் அறிக்கையில் “இஸ்லாமிய அரசாங்கம்” என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து லிம் கிட் சியாங் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து, சம்பந்தப்பட்ட அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டார். தனது அறிக்கைக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.