Home நாடு புதிய தொற்றுகள் 9,353 – அதில் பாதி சிலாங்கூரில்!

புதிய தொற்றுகள் 9,353 – அதில் பாதி சிலாங்கூரில்!

1500
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை ஜூலை 10 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 9,353 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் சிலாங்கூரில் மட்டும் அதில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூர் கடந்த 24 மணி நேரத்தில் 4,277 தொற்றுகளைப் பதிவு செய்தது.

#TamilSchoolmychoice

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 827,191 ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் 1,398 தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்றாவது இடத்தை 638 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.