Home இந்தியா உத்தரப் பிரதேசத்தில் அல் கொய்தா பயங்கரவாதத் தாக்குதல் அபாயம்

உத்தரப் பிரதேசத்தில் அல் கொய்தா பயங்கரவாதத் தாக்குதல் அபாயம்

696
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அல் கய்தா பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்படலாம் என்ற அபாயம் நிலவுகின்றது. இதைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்புக் காவல் துறையினர் தங்களின் தேடுதல் வேட்டைகளையும் புலனாய்வுகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

“மனித வெடிகுண்டுகள்” வடிவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் முழு விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) அல் கொய்தா பயங்கரவாதக் குழுவின் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மற்ற இடங்களில் மறைந்துள்ளதாக நம்பப்படும் பயங்கரவாதிகளைப் பிடிக்க காவல் துறையின் படைகள் தீவிரத் தேடுதலில் இறங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

பயங்கரவாதத் தாக்குதல் குறித்த பின்னணியை மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு நேற்று கண்டுபிடித்தது. லக்னோவில் உள்ள இரண்டு வீடுகளில் அதிரடி பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அங்கிருந்த 7 பேரில் 5 பேர் தப்பித்துச் சென்றனர்.

இருவர் மட்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். தப்பிச் சென்ற ஐவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய ராமர் ஆலயம் கட்டப்படு வரும் அயோத்தி நகர் உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. நாட்டின் தலைநகர் புதுடில்லி தனி மாநிலமாக செயல்பட்டாலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அமைந்திருக்கிறது.

இதன் காரணமாக பல்லாண்டுகளாக பயங்கரவாத அபாயத்தில் இருந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது.