Home நாடு கொவிட்-19; கொவிட் 19 தொற்றுகளின் எண்ணிக்கை 8,574 ஆகக் குறைந்தன

கொவிட்-19; கொவிட் 19 தொற்றுகளின் எண்ணிக்கை 8,574 ஆகக் குறைந்தன

1678
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த சில நாட்களாக 8 ஆயிரம், 9 ஆயிரம் என அதிகரித்து வந்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை இன்று திங்கட்கிழமை (ஜூலை 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஆறுதலளிக்கும் விதத்தில் 8,574 ஆகக் குறைந்தன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 844,870 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 4,308 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மொத்த தொற்றுகளில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள் சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.

தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்த கோலாலம்பூர் இன்று கணிசமான அளவில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்ததால் 609 தொற்றுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.