Home நாடு கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 10,741 ஆகக் குறைந்தன

கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 10,741 ஆகக் குறைந்தன

1933
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 18 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 10,241 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. நேற்றைய எண்ணிக்கையை விட இது ஏறத்தாழ 2 ஆயிரம் குறைவாகும்.

எனினும் நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் தொற்றுகள் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 916,561 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 4,828 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 945 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

808 தொற்றுகளோடு வழக்கத்திற்கு மாறாக ஜோகூர் 3-வது இடத்தில் இருக்கிறது.

நெகிரி செம்பிலான் 771 தொற்றுகளோடு நான்காவது  இடத்தில் இருக்கிறது.