Home நாடு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மதிப்பீட்டுத் தேர்வுகள் எப்போது?

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மதிப்பீட்டுத் தேர்வுகள் எப்போது?

907
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் கட்டம் கட்டமாக பள்ளிகள் நாடெங்கிலும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் பள்ளிகளின் திறப்பு சுகாதார அமைச்சின் மதிப்பீட்டிற்கு ஏற்ப அமையும் என்றும் கல்வி அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

சுகாதார அமைச்சு கொவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு வழங்கும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது உறுதிப்படுத்தப்படும்.

இதற்கிடையில் எல்லா வகுப்புகளும் தொடர்ந்து இயங்கலை வழியே நடத்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

யுபிஎஸ்ஆர் தேர்வுகள் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டு உள்ளன. எனவே, இந்த ஆண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படவிருக்கின்றன.

பள்ளிகள் இன்னும் திறக்காததால், செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் எஸ்பிஎம் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.