கோலாலம்பூர் : மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரபல உள்ளூர் தொடரானத் ‘தமிழ்லட்சுமி’ சீசன் 2, முதல் ஒளிபரப்புக் காணும் ரியாலிட்டிச் சமையல் நிகழ்ச்சியான ‘மாஸ்டர் செஃப் தமிழ்’, நகைச்சுவை நிகழ்ச்சியானக் ‘கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0’ மற்றும் இசை நிகழ்ச்சியான ‘மடை திறந்து அத்தியாயம் 2: உயிரே’ உட்பட முதல் ஒளிபரப்புக் காணும் மேலும் அதிகமான உயர் தர உள்ளூர் மற்றும் அனைத்துலக தமிழ் நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகிய அலைவரிசைகளில் கிடைக்கப் பெறும்.
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “எங்களின் விசுவாசமான ஆஸ்ட்ரோ இரசிகர்கள் சிறந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுக் களிக்கத் தகுதியானவர்கள்.
எனவே, அவர்கள் கண்டு மகிழ்வதற்க்காக மேலும் அதிகமான உள்ளடக்கத் தேர்வுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆஸ்ட்ரோவில் ‘தமிழ்லட்சுமி’ சீசன் 1-க்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, விரும்பத்தக்க மற்றும் புதியக் கதாப்பாத்திரங்களைத் தாங்கி மலரும், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டச் சீசன் 2-ஐ இரசிகர்கள் கண்டுக் களிக்கலாம். அதுமட்டும்மின்றி, இம்மாதம் இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் பிறச் சிறந்த நிகழ்ச்சிகளையும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம்.”
முதல் ஒளிபரப்புக் காணும் பிரபலமான உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடரான, ‘தமிழ்லட்சுமி’ சீசன் 2-ஐ அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் எதிர்ப்பார்க்கலாம்.
விருது வென்ற உள்ளூர் இயக்குநர் டி.எஸ். டாக்டர் விமலா பெருமாள் மற்றும் டேனேஸ் குமார் தயாரித்த, சீசன் 2 நிச்சயமாக மனதை வருடும் பல தருணங்களைச் சித்தரித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும்.
ஹேமாஜி, மூன் நிலா, நித்யஸ்ரீ, சீலன் மனோகரன், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி, தேவேந்திரன் சரிமிர்கன், ஸ்ரீ குமரன் உட்படப் பலத் திறமையான உள்ளூர் நடிகர்கள் சீசன் 2-இல் நடித்துள்ளனர். ‘தமிழ்லட்சுமி’ சீசன் 2, ஆகஸ்டு 12 முதல் இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
விஜய் சேதுபதியின் ‘மாஸ்டர் செஃப்’
‘மாஸ்டர் செஃப்’ எனும் ரியாலிட்டிச் சமையல் போட்டி நிகழ்ச்சியை மையமாகக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட, முதல் ஒளிபரப்புக் காணும் ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ எனும் நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டுக் களிக்கலாம்.
எண்ணிலடங்கா விருதுகளை வென்றுக் குவித்த நடிகர், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இத்தொடர், வளர்ந்து வரும் சமையல்காரர்களுக்கிடையில் ஏற்படும் கடுமையானப் போட்டியைச் சித்தரிக்கும். ‘மாஸ்டர் செஃப் தமிழ்’, ஆகஸ்டு 7 முதல் இரவு 9.30 மணிக்குச் சன் டிவி எச்டி (அலைவரிசை 211), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
அதுமட்டுமின்றி, பிரபல இந்திய நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான ரோபோ சங்கர், ஷகீலா, மதுமிதா, திண்டுக்கல் சரவணன், முல்லை, கோதண்டம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் இடம்பெறும் ‘கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0’ எனும் பிரம்மாண்டமான நகைச்சுவை நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.
வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டப் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாகக் கலந்துச் சிறப்பிப்பர். ‘கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0’, ஆகஸ்டு 8 முதல் இரவு 8 மணிக்குக் கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 222), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
ஹரிஹரன், மஞ்சரி, லாவண்யா மற்றும் சந்திராயினி உட்படப் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் ‘மடை திறந்து அத்தியாயம் 2: உயிரே’ எனும் இசை நிகழ்ச்சியை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு மகிழலாம்.
புகழ்பெற்றப் பின்னணி பாடகர், ஹரிஹரனின் சிறந்த பாடல்கள் இவ்விசை நிகழ்ச்சியில் இடம்பெறும். ‘மடை திறந்து அத்தியாயம் 2: உயிரே’, ஆகஸ்டு 10, மாலை 5 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.