Home நாடு கொவிட்-19; புதிய உச்சம் : தொற்றுகள் 20,596

கொவிட்-19; புதிய உச்சம் : தொற்றுகள் 20,596

2709
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து 20,596 ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 1,203,706 ஆகப் பதிவாகி இருக்கிறது.

கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்.

#TamilSchoolmychoice

சிலாங்கூரில் மட்டும் 8,549 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,163 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 4 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

கெடா 1,446, பினாங்கு 1,022, ஜோகூர் 1,300, சபா 1,062 என்ற எண்ணிக்கையில் புதிய ஒருநாள் தொற்றுகள் பதிவாயின.