அதே வேளையில் மரண எண்ணிக்கை 160 ஆகப் பதிவாகியது.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 10,179 ஆக உயர்ந்திருக்கிறது.
புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,224,595 என பதிவாகியது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,096 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 545 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலாங்கூரில் மட்டும் 8,792 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,483 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 3 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.
கெடா, சபா, ஜோகூர் ஆகியவையே அந்த 3 மாநிலங்களாகும்.
கிளந்தான், நெகிரி செம்பிலான் இரு மாநிலங்களும் ஆயிரத்தை நெருங்கு எண்ணிக்கையிலான தொற்றுகளைப் பதிவு செய்தன.
221,396 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.