Home நாடு கொவிட்-19; மரணங்கள் 211! மரணமடைந்து மருத்துவமனை கொண்டுவரப்பட்டவர்கள் 16

கொவிட்-19; மரணங்கள் 211! மரணமடைந்து மருத்துவமனை கொண்டுவரப்பட்டவர்கள் 16

3086
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 11) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20,780 ஆகப் பதிவாகிய வேளையில் மரண எண்ணிக்கை 211 ஆக பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

மரண எண்ணிக்கை  தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது. மீண்டும் 200-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11,373 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 195 பேர் மருத்துவமனைகளிலேயே மரணமடைந்திருக்கின்றனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் 16 பேர்கள் ஆகும்.

ஒருநாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,973 ஆகப் பதிவாகியது. இதைத் தொடர்ந்து குணமடைந்தவர்களின் இதுவரையிலான எண்ணிக்கை 1,075,816 ஆக உயர்ந்தது.

புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,320,547 என பதிவாகியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,053 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் என்ற நிலையில் இருந்து வருகின்றன.

மாநிலங்கள் அளவில் 6,921 ஒருநாள் தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அது தவிர மேலும் 7 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்திருக்கின்றன. கோலாலம்பூர், ஜோகூர், கெடா, சபா, பினாங்கு, கிளந்தான், நெகிரி செம்பிலான் ஆகியவையே அந்த 7 மாநிலங்களாகும்.

மாநிலங்கள் ரீதியான புள்ளிவிவரங்களை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.