Home உலகம் இத்தாலி அதிபராக நெப்போலிடானோ மீண்டும் தேர்வு

இத்தாலி அதிபராக நெப்போலிடானோ மீண்டும் தேர்வு

608
0
SHARE
Ad

italyரோம், ஏப்ரல் 22- இத்தாலியின் அதிபராக ஜார்ஜியோ நெப்போலிடானோ (வயது 87) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போதைய அதிபர் நெப்போலிடானோவின் பதவிக்காலமும் முடிந்ததால் அங்கு மேலும் குழப்பம் ஏற்பட்டது. புதிய அதிபரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் தற்போதைய அதிபரையே தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டன.

#TamilSchoolmychoice

நெப்போலிடானோவும் அதிபராக தொடர ஒப்புக் கொண்டார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் மொத்தம் 738 வாக்குகளைப் பெற்றார்.