செல்லியல் செய்திகள் காணொலி | மொகிதின் திங்கட்கிழமை பதவி விலகுவாரா? | 14 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | PM to resign on Monday? | 14 August 2021
நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் மொகிதின் யாசின் எதிர்க்கட்சிகளுக்கு ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். புதிய சீர்திருத்தங்களையும் அறிவித்தார்.
ஆனால், எல்லா எதிர்க்கட்சிகளும் மொகிதினின் பரிந்துரைகளை நிராகரித்தன. இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை மொகிதின் மாமன்னரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றே தனது பதவியிலிருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அது குறித்த செய்திகளையும் மேலும் சில இன்றைய முக்கிய செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.