Home உலகம் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்க இராணுவம்!

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்க இராணுவம்!

689
0
SHARE
Ad

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் இராணுவத்தினரை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்திருக்கிறார்.

அந்த நாட்டிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகள், அடுத்தடுத்து பல நகர்களைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தாலிபான் கரங்களில் வீழ்ந்தால் உலக அளவில் பல்வேறு மாற்றங்களுக்கு அது வித்திடும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானிலுருந்து அமெரிக்கத் துருப்புகளை மீட்டுக் கொள்ளும், ஜோ பைடனின் திடீர் முடிவு அமெரிக்காவிலும், உலக நாடுகளிடத்திலும் பலத்த கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) ஜோ பைடன் கூடுதலாக 5 ஆயிரம் துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அங்கீகரித்திருக்கிறார். ஏற்கனவே அங்கு ஆயிரம் துருப்புகள் இருக்கின்றனர். அமெரிக்க இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக மீட்டுக் கொள்ளப்படுவதற்கு புதிதாக அனுப்பப்படும் துருப்புகள் உதவுவர். மேலும் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்கும் அவர்கள் தங்களின் உதவிகளை வழங்குவர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரான மசார்-ஐ-ஷாரிப் நகரை தாலிபான்கள் கைப்பற்றியிருக்கின்றனர். ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் இந்த நகர் அமைந்திருக்கிறது.

பல இடங்களில் ஆப்கானிஸ்தானின் இராணுவத்தினர் போதுமான இராணுவ வசதிகளும், வழிகாட்டுதல்களும் இன்றி ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.