Home நாடு கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,546

கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,546

533
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று  ஆகஸ்ட் 15 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இருபதாயிரத்தைக் கடந்து 20,546 ஆகப் பதிவாகியது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 1,404,899 ஆக உயர்ந்ததாக சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தகவல் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் 7 ஆயிரத்தைக் கடந்தும், கோலாலம்பூர் 1,442 எனவும் தொற்றுகளைப் பதிவு செய்தன.

இவை தவிர, கெடா, பினாங்கு, பேராக், ஜோகூர், கிளந்தான், சபா, ஆகிய 6 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன. பகாங் மாநிலமும் திடீரென அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தது.

926 தொற்றுகளைப் பகாங் பதிவு செய்த வேளையில் சரவாக்கும்  963 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது