Home நாடு கொவிட் தடுப்பூசிகள் : 32 விழுக்காட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன

கொவிட் தடுப்பூசிகள் : 32 விழுக்காட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன

457
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று  சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) நள்ளிரவு வரையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 32 விழுக்காட்டு மக்களுக்கு 2 தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டன என சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா அறிவித்திருக்கிறார்.

நேற்று நள்ளிரவு வரையிலான ஒரு நாளில் 442,150 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

51.7 விழுக்காட்டு மக்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு விட்டதாகவும் அடாம் பாபா மேலும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அடுத்த கட்டமாக 12 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர் சிறுமியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் திட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.