மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது. மீண்டும் 200-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 12,510 ஆக உயர்ந்திருக்கிறது.
கொவிட் தொற்றால் மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்.
புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,404,899 என பதிவாகியது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,059 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலாங்கூர் 7 ஆயிரத்தைக் கடந்தும், கோலாலம்பூர் 1,442 எனவும் தொற்றுகளைப் பதிவு செய்தன.
இவை தவிர, கெடா, பினாங்கு, பேராக், ஜோகூர், கிளந்தான், சபா, ஆகிய 6 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன. பகாங் மாநிலமும் திடீரென அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தது.
926 தொற்றுகளைப் பகாங் பதிவு செய்த வேளையில் சரவாக்கும் 963 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது