Home நாடு மாமன்னருடனான சந்திப்பு முடிந்து கட்சித் தலைவர்கள் அரண்மனையிலிருந்து புறப்பட்டனர்

மாமன்னருடனான சந்திப்பு முடிந்து கட்சித் தலைவர்கள் அரண்மனையிலிருந்து புறப்பட்டனர்

508
0
SHARE
Ad
அன்வார் இப்ராகிம் – கோப்புப் படம்

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.00 மணியளவில் அரண்மனையை வந்தடைந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் 4.00 மணியளவில் மாமன்னருடனான சந்திப்பு முடிந்து அரண்மனையில் இருந்து வெளியேறத் தொடங்கினர்.

இந்தச் சந்திப்பின்போது துணை மாமன்னரான பேராக் சுல்தானும் உடனிருந்தார்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இந்த சந்திப்பு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமல்ல மாறாக, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் பழைய பகைமைகளை மறந்து புதிய பாதையில் நாட்டின் மேம்பாட்டுக்கான பயணம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சந்திப்பு எனத் தெரிவித்தார்.