Home நாடு டான்ஸ்ரீ மகாலிங்கம் காலமானார்

டான்ஸ்ரீ மகாலிங்கம் காலமானார்

511
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் (படம்) நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிற்பகல் 12.45 மணியளவில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அவர் கொவிட்-19 தொடர்பான பிரச்சனைகளினால் மரணமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கறிஞரான மகாலிங்கம், மஇகா பூச்சோங் கிளையின் தலைவராக நீண்ட காலம் செயல்பட்டு வந்தவர். மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர், தலைமைப் பொருளாளர், தலைமைச் செயலாளர், தேசிய உதவித் தலைவர் போன்ற பதவிகளையும் கட்சியில் வகித்தவர் டான்ஸ்ரீ மகாலிங்கம்.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தேசியத் தலைவராக இருந்த போது அவரது தலைமைத்துவத்தில் மத்திய செயலவை உறுப்பினராகவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியவர் மகாலிங்கம்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர், செனட்டர்,  துணையமைச்சர் என மஇகாவின் சார்பில் மாநில அரசாங்கத்திலும், மத்திய அரசாங்கத்திலும் பல பொறுப்புகளை வகித்தவர் மகாலிங்கம்.

2008-ஆம் ஆண்டு முதற்கொண்டு தீவிர அரசியலில் இருந்து மகாலிங்கம் ஒதுங்கிக் கொண்டார்.