Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : மொகிதின் வசம் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

காணொலி : செல்லியல் செய்திகள் : மொகிதின் வசம் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

725
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  மொகிதின் வசம் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் | 17 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Muhyiddin holds 35 MPs   | 17 August 2021

அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களின் தேர்வை நாளை புதன்கிழமை மாலை 4.00-க்குள் தெரிவிக்க வேண்டுமென மாமன்னர், நாடாளுமன்ற அவைத் தலைவர் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் யாரைப் பிரதமராகத் தேர்வு செய்வது என விவாதித்துக் கொண்டிருக்க, பெர்சாத்து சார்பிலான 35 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே ஒரு வேட்பாளரை பிரதமராகத் தேர்வு செய்து அதற்கான சத்தியப் பிரமாணப் பத்திரங்களை மொகிதின் யாசின் வசம் ஒப்படைத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மொகிதின் வசம் இருக்கும் அந்த 35 பேரும் தேர்வு செய்துள்ள பிரதமர் வேட்பாளர் யார்? மொகிதின் வசம் உள்ள 35 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவுதான் அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்த தகவல்களோடு, மற்ற முக்கிய செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைய ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.