Home இந்தியா தமிழ்நாடு நடமாட்டக் கட்டுப்பாடு – தளர்வுகளுடன் 2 வாரங்கள் நீட்டிப்பு

தமிழ்நாடு நடமாட்டக் கட்டுப்பாடு – தளர்வுகளுடன் 2 வாரங்கள் நீட்டிப்பு

1094
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • ஆகஸ்ட் 23 தொடங்கி செப்டம்பர் 6 வரையில் மேலும் 2 வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறது.
  • சினிமா திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 50 விழுக்காட்டு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அனைத்துப் பணியாளர்களும் கொரொனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • உல்லாசப் பூங்காக்களும் பொதுமக்கள் பயனுக்குத் திறக்கப்படுகின்றன.
  • கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • விளையாட்டு மற்றும் நீச்சல் பயிற்சிகள் 50 விழுக்காட்டு பங்கேற்பாளர்களுடன் அனுமதிக்கப்படுகின்றன.
  • உயிரியல் பூங்கா, தாவரவியல்  பூங்கா, படகு இல்லங்கள் 100 விழுக்காட்டு பணியாளர்களுடன் திறக்கப்படுகின்றன.
  • இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த அனைத்து கடைகளும் இனி தற்போது ஆகஸ்ட் 23 முதல் இரவு 10 வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
  • செப்டம்பர் 1 முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கொரொனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
  • தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளும் செயல்படும்.
  • கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரை வளாகங்களில் சிறு வணிகங்கள் செய்யும் வணிகர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.