Home கருத்தாய்வு இந்தியர்களை மூழ்கும் கப்பலில் ஏற்றிவிட்டுள்ள இயக்கம் ஹிண்ட்ராப்தான்!

இந்தியர்களை மூழ்கும் கப்பலில் ஏற்றிவிட்டுள்ள இயக்கம் ஹிண்ட்ராப்தான்!

660
0
SHARE
Ad

Waytha-Sliderஏப்ரல் 22 – “இந்நாட்டில் இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கும் ஒரே கட்சி என மூலை முடுக்கெல்லாம் சுய பிரகடனம் செய்து வந்த மஇகா இன்று தன்மானம் இழந்து, செல்வாக்கு இழந்து சமூகத்தின் பார்வையில் பரிகாசத்துக்குரிய கட்சியாக ஆகிவிட்டதை உணர்த்துவதாக இருந்தது  ஹிண்ராப்புடன்  பிரதமரின் ஒப்பந்தம் என சிலாங்கூர், பூச்சோங்கைச் சேர்ந்தவரும் ஹிண்ட்ராப்பின் செயல் நடவடிக்கைகளில் முன்பு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவருமானஅண.பாக்கியநாதன் பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் பத்திரிக்கைகளில் விடுத்த தனதுஅறிக்கையில் பின்வருமாறு மேலும் குறிப்பிட்டுள்ளார்:-  

நாடு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு மஇகா அம்னோவின் எடுபிடியாக இருந்து வந்தது மறுக்க முடியாத உண்மை. எதிர்த்து நிற்கும் தைரியம் இல்லாத காரணத்தால் அம்னோவினால் நமது இனத்திற்கு  மறுக்கப்பட்ட உரிமைகள், இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல.”

 விரட்டப்பட்ட தோட்டப்புற மக்கள்

“குறிப்பாக, மகாதீர் காலத்தில் நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அளவே கிடையாது. தோட்டப்புற மக்களை மேம்பாடு என்ற பெயரில் விரட்டி ஏழ்மையும் சமூக சீர்கேடுகளும் நிறைந்த சமூகமாக மாற்றியதே இந்த ஆசாமிதான். மகாதீரின் இன ஒதுக்கல் கொள்கைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குவது புத்ரா ஜெயா உருவாக்கத்தின் போது விரட்டப்பட்ட தோட்டப்புற மக்களுக்காக உருவாக்கப்பட்ட டிங்கில், தாமான் பெர்மாத்தா. குடியிருப்பாகும்.”

“நான்கு தோட்டங்களை சேர்ந்த நமது இன மக்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையில் முறையான இழப்பீடும் உரிய வீடமைப்புத் திட்டமும் உருவாக்கப்படுவதை உறுதி  செய்யக்கூடிய திராணி மஇகாவுக்கு இல்லாது போய்விட்டது.”

“சில ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியன்று தங்கள் மாநாட்டை நடத்தியதால், அம்னோ மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களுக்கு பத்திரிகை கிடைக்கவில்லை. உடனே பொங்கியெழுந்த அம்னோ பேராளர்கள் பத்திரிகை விற்பனையில் இந்தியர்களின் ஆதிக்கத்தை பறிக்க வேண்டும் என முழக்கமிட்டார்கள்.”

“அம்னோ பேராளர்களின் பேச்சைக் கேட்டு பத்திரிகை விற்பனையாளர்கள் பொங்கியெழுந்தார்கள். ஆனால் அம்னோகாரர்களின் இந்த ஆணவப் போக்கை மஇகாகாரர்கள் கண்டு கொள்ளவேயில்லை.”

“மஇகா மாநாடுகளில் கலந்து கொண்ட மகாதீர் இந்நாட்டில் சுகபோக வாழ்வு வாழ்வதற்குரிய வாய்ப்பு கிடைத்ததற்காக இந்தியர்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும் என கூறினார். அது பொய் என்று எந்த பேராளரும் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.”

“இந்தியர்களில் அதிகமானவர்கள் டாக்டர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் உள்ளதாகவும் அதனால் இந்தியச் சமூகம் ஏழைச் சமூகம் அல்ல என்றும் மகாதீர் கூறினார். அந்த கருத்தை நிராகரிக்க மஇகாவிலுள்ள யாரும் முன்வரவில்லை”.

வெள்ளைக்காரன் உங்களை இங்கு கொண்டு வந்தான். உங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வளங்களை தனது நாட்டிற்கு கொண்டுச் சென்று விட்டான்.ஆகவே உங்கள் உழைப்பினால் கிடைத்தது எதுவும் இந்த நாட்டில் மிஞ்சியிருக்கவில்லை என்று கூறினார். அதையும் ஆட்சேபிக்கும் தைரியம் மஇகாவுக்கு இல்லை.”

“இதுமாத்திரமல்ல, கம்போங் மேடான் முதற்கொண்டு எத்தனையோ சம்பவங்களில் மகாதீரின் தலைமைத்துவதால் இந்திய இனம் பாதிக்கப்பட்டது. இந்திய சமுதாயத்தின் தானைத் தலைவர் என மகுடம் சூட்டிக் கொண்ட அப்போதைய மஇகா தலைவர் சாமிவேலு மகாதீரின் அடக்கு முறைக்கு எதிராககத் தனது எதிர்ப்பைக் காட்டவில்லை.”

மகாதீருக்குப் பின் தலைவர்களின் போக்கிலும் மாற்றமில்லை

“மகாதீர் போய், அப்துல்லா படாவி போய், நஜிப் வந்தார். சாமிவேலு போய் அவரின் பிரதிநிதியாக பழனிவேல் வந்தார். ஆட்கள் மாறினார்களே தவிர இந்திய சமுதாயத்தின் அலங்கோலம் மாறவில்லை.”

“மகாதீர் திட்டமிட்டு இந்திய இனத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தினார் என்றால் நஜிப் திட்டமிட்டு நமது இனத்தை பிரித்தார். ஏகப்பட்ட இந்திய கட்சிகளுக்கு அங்கீகாரம் தந்தார். என்.ஜி.. – அதாவது அரசு சாரா இயக்கங்கள் – என்ற பெயரில்  மலையாளம், தெலுங்கு,சீக்கியம் என இன, பிராந்திய அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் நமது சமுதாயத்தை கூறு போட்டார்.”

“ஒரு காலத்தில் ஒரே கட்சியாக இருந்த போதே ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருந்த மஇகா இப்போது கை வேறு கால் வேறாக கழன்று கிடக்கிறது. மஇகா மூலம்தான் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையில் யாரும் இல்லை. ஆளாளுக்கு நேரடியாகச் சென்று காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.”

சமூக சீர்கேடுகளுக்கு வித்திட்ட கட்சி என்ற அவப்பெயரை சம்பாதித்துள்ள மஇகாவை இனியும் நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு அக்கட்சி உறுப்பினர்கள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை

மீண்டும் மகாதீரின் ஆட்சி

“இருப்பினும் இம்முறை நஜிப் மாட்டியுள்ள பல சிக்கல்களிலிருந்து  விடுபடுவது கடினம், உள்கட்சி நெருக்குதலினால் தேர்தலை இவ்வளவு காலமாகத் தள்ளிப்போட்டு வந்தார்.” 

“கட்சிக்குள்  அதிருப்தியாளர்கள் கை ஓங்கி வருவதும், துன் மகாதீர்  நஜிப்பிற்கு நிபந்தனை விதித்திருப்பதும்  நாட்டுக்கு ஒன்றை மட்டும்  உணர்த்துகிறது. நஜிப் தேர்தல் வரைக்குந்தான் பிரதமர், என்பது. அது அவருக்கே நன்றாகவே தெரியும்அம்னோவால் பொதுத் தேர்தலுக்கு முன் அவரை பதவியிலிருந்து அகற்ற முடியாது என்பதனை அவர்  நன்கு  உணர்ந்திருந்தார்.”

“தேர்தலுக்குப் பின் பாரிசான் வெற்றி பெற்றாலும் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்பது  உண்மையிலும் உண்மை. மகாதீரின் தலைமையில் ஒரு கும்பல் நாட்டின் தலைமைத்துவத்தை எடுக்கும், அதன் பின் பெரிய அட்டூழியத்திலிருந்து இந்திய இனத்தைக் காப்பாற்ற  . .காவால் முடியுமாஇந்தியச் சமுதாயத்திற்கு நஜிப் கொடுத்த அத்தனையும் வாக்குறுதியாகவே இன்று வரை  இருக்கிறது, அப்படியே தொடர்ந்து இருக்கும். துங்கு அவர் பதவிக்காலத்தில் துன் சம்பந்தனாருக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் போல  இதுவும் இருக்கும்.”

தேசிய முன்னணி மீது கடுங் கோபம் கொண்டுள்ள வாக்காளர்கள்

“இன்று  தேசிய முன்னணி மீது இந்நாட்டின் மூன்று பெரிய இனங்களும்  கடும் கோபங்கொண்டுள்ளன, ராக்கெட்டின் சின்னத்தை சங்கப் பதிவிலாகா மூலம் தடை செய்யும் முயற்சிகள், பாஸ் தலைவர்களைப் பற்றிய  காம வீடியோக்கள் வெளியிட்டதன் பின்னணி, இந்துக்களை அவமதித்த ஜூல்கிப்ளி நோர்டினுக்கு நாடாளுமன்றத் தொகுதி வழங்கியது, இந்தியர்களை அவமதித்த இப்ராகிம் அலிக்கும் மறைமுகமாக தொகுதி வழங்கியது என முற்றிலும் வழக்கத்துக்கு மாறான ஒரு நிலையைப்  தேசிய முன்னணி ஏற்படுத்தியுள்ளது.

இதனால் முதல் முறையாக மூன்று பெரிய இனங்களும், தேசிய முன்னணிக்கு எதிராக திரண்டு வந்து வாக்களிக்கப் போகின்றார்கள்”

 “இந்தத் தேர்தலில் தனது அணுகுமுறையில் தேசிய முன்னணி பாரிசானுக்கு பெரிய மூளை வறட்சி ஏற்பட்டுள்ளதை உணர்த்துவதாகவுள்ளது. இப்படிப்பட்டவர்களால் எவ்வண்ணம் நாட்டு மக்களுக்குச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும்? ஆகவே நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.”

 “ஆக பாரிசான் என்ற மூழ்கும் கப்பலில் மீண்டும் ஏற இந்தியர்கள், 50 ஆம் ஆண்டுகால  ஏமாளிகள் அல்ல. அரசியல் ரீதியில் திவாலானவருடன் எத்தனை உடன் பட்டிகைகளிலும் கையெழுத்திடலாம்இதற்கு மேல் நஜிப் எத்தனை வாக்குறுதிகளும் அளிக்கலாம்  ஆனால் அவை அனைத்தும் வெற்று காகிதமாகவே இருக்கும்  என்பதனை இந்தியர்கள் உணர்ந்துள்ளனர்.”

“ஆகவே எதற்காக வரவழைக்கப்பட்டாரோ, அவர் அதனை நன்றாகவே நடத்தினார், எதனை பக்காத்தான் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாரோ, அதனை பாரிசானும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மையை நன்றாகவே மறைத்தார். அரசியல் ரீதியில் திவாலான நிலையில் இருக்கும் தேசிய முன்னணியுடன் உடன் படிக்கைகளிலும் கையெழுத்திட்டு தனது நிலையை வேதமூர்த்தி நமக்கு நன்றாக விளக்கி விட்டார்”.

-இவ்வாறு அண.பாக்கியநாதன் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.