Home நாடு கொவிட் 19 : இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம்! 24,599 புதிய தொற்றுகள்

கொவிட் 19 : இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம்! 24,599 புதிய தொற்றுகள்

1082
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்து 24,599 ஆக பதிவாகியது.

சில நாட்களுக்கு முன்னர் ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 17 ஆயிரமாகக் குறைந்தபோது, மலேசியர்கள் மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைந்தனர். ஆனால், தற்போது மீண்டும் 24 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது, புதிய தொற்றுகளின் எண்ணிக்கை.

இதுவரையிலான ஒருநாள் தொற்றுகளில் இதுவே மிக அதிகமாக எண்ணிக்கையாகும்.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது மீண்டும் புதிய ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.

இன்றைய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,640,843 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்கள் ரீதியிலான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூர் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்து  தொடர்ந்து மிக அதிகமான தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக முன்னிலை வகிக்கிறது.

கெடா, பேராக், கிளந்தான், ஆகிய 3 மாநிலங்களில்  ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.

கோலாலம்பூர், ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது. 881 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது கோலாலம்பூர்.

சரவாக், பினாங்கு, ஜோகூர், ஆகிய 3 மாநிலங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தன.

சபா 3,487 தொற்றுகளுடன் சிலாங்கூருக்கு அடுத்து மிக அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்த மாநிலமாகியுள்ளது.