Home நாடு பிரதமராகச் சாதிக்க முடியாதவர் – தேசிய மீட்சி மன்றத் தலைவராக என்ன சாதிப்பார்?

பிரதமராகச் சாதிக்க முடியாதவர் – தேசிய மீட்சி மன்றத் தலைவராக என்ன சாதிப்பார்?

451
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியங்களை மட்டுமல்ல – கண்டனங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இஸ்மாயில் சாப்ரியின் தலைமைத்துவத்திற்கு மொகிதின் நியமனம் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய மீட்சி மன்றம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமாக செயல்பட வேண்டிய அமைப்பாகும்.

#TamilSchoolmychoice

அதற்குப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியே தலைமையேற்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதை விடுத்து, சுமார் 16 மாதங்களுக்கும் மேலாகப் பிரதமராக இருந்து கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாதவர் – கொவிட்டைக் குறைக்க எனக்குத் தேவை என அவசரகாலச் சட்டத்தை கொண்டு வந்தவர் – மொகிதின் யாசின்.

கொவிட்டையும் குறைக்க முடியாமல், அவசர காலச் சட்டத்தைக் கொண்டு தனது பதவிக் காலத்தையும் நீட்டித்துக் கொண்ட அவரையே மீண்டும் கொவிட்-19 தொற்றை ஒழிக்க தேசிய மீட்சி மன்றத் தலைவராக நியமிப்பது என்ன நியாயம் என்ற கேள்விகளும் எழுகின்றன.

அடுத்து வரும் நாட்களில் மொகிதின் யாசின் நியமனம் மீதான கண்டனங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.