Home நாடு அசாலினா நாடாளுமன்ற அவைத் தலைவராவாரா?

அசாலினா நாடாளுமன்ற அவைத் தலைவராவாரா?

719
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் ஆட்சியின்போது நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் அசாலினா ஒத்மான் சைட். அம்னோவின் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர்.

மொகிதின் யாசின் பதவி விலகியதும், தனது நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார் அசாலினா. அவைத் தலைவராக, தான் நடுநிலைமையோடு நடந்து கொள்ள முடியாத நிலைமை இருக்கிறது என்பதையும் தனது பதவி விலகலுக்கான காரணமாக அவர் சுட்டிக் காட்டினார்.

இப்போது அம்னோ சார்பில் அசாலினா நாடாளுமன்ற அவைத் தலைவராக முன்மொழியப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் நடப்பு அவைத் தலைவர் அசார் ஹாருணை அகற்ற எதிர்கட்சிகள் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை சமர்ப்பித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவை குறித்து தான் முடிவெடுக்கவில்லை என்றும், அவற்றை அவையின் துணைத் தலைவர் முகமட் ரஷிட் ஹாஸ்னோன் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டதாகவும் அசார் ஹாருண் கூறியிருக்கிறார்.

அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடியே அசாலினாவை அவைத் தலைவராக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிவார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal