Home உலகம் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி சகோதரர்களுக்கு 20-வது இடம்

உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி சகோதரர்களுக்கு 20-வது இடம்

823
0
SHARE
Ad

MUKESH-AMBANIலண்டன், ஏப். 22- 2013-ம் ஆண்டிற்கான உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சகோதரர்கள் 20-வது இடத்தை பிடித்துள்ளனர்.

சுமார் ஆயிரத்து 900 கோடி பவுண்ட் (இந்திய மதிப்புக்கு ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 100 கோடி) சொத்து மதிப்புடன் அம்பானி சகோதரர்கள் இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு அடுத்த இந்திய பணக்காரர்கள் வரிசையில் 11 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை வைத்துள்ள இந்துஜா சகோதரர்கள் இந்த பட்டியலில் 47வது இடத்தை பெற்றுள்ளனர்.