Home நாடு மித்ரா : 17 பேர் கைது – 11 பேர் விடுதலை

மித்ரா : 17 பேர் கைது – 11 பேர் விடுதலை

1022
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மித்ரா மூலம் வழங்கப்பட்ட மானியங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரையில் 17 நபர்களைக் கைது செய்துள்ளது.

இவர்களில் 11 பேர் மீதான தடுப்புக் காவல் நீட்டிப்பைப் பெறுவதில் ஊழல் தடுப்பு ஆணையம் தோல்வி கண்டதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை 7 நாட்களுக்குத் தடுத்து வைக்க ஊழல் தடுப்பு ஆணையம் புத்ரா ஜெயா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும் அதற்கான நீட்டிப்பை 11 பேர்களுக்கு நீதிமன்றம் வழங்க மறுத்துவிட்டது என கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரைப் பிரதிநிதித்த அஷிக் அலி என்ற வழக்கறிஞர் தெரிவித்தார் என மலேசியாகினி செய்திக் குறிப்பு குறிப்பிட்டது.

விடுதலை செய்யப்பட்ட 11 பேர்களும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான ஜாமீன் தொகையை செலுத்தியுள்ளனர்.

ஒரே ஒரு நபருக்கான தடுப்புக் காவல் மட்டும் அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.

மித்ரா மூலம் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் மானியங்களை முறைகேடாகப் பயன்படுத்தினர் என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது.