Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : பிரபல உள்ளூர் தமிழ் தொடர் ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 2 –...

ஆஸ்ட்ரோ : பிரபல உள்ளூர் தமிழ் தொடர் ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 2 – முதல் ஒளிபரப்பு

578
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ‘கல்யாணம் 2 காதல்’ என்ற தொடர் ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகி தொலைக்காட்சி நேயர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தொடர், கடந்த நவம்பர் 8, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202) வாயிலாக முதல் ஒளிபரப்பு கண்டது.

மேலும் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றிலும் முதல் ஒளிபரப்புக் காணும் ‘கல்யாணம் 2 காதல்’ மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிரபலமான உள்ளூர் தமிழ் அறிவியல் புனைகதைக் காதல் தொடராகும்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகம் (விண்மீன்) மற்றும் மின்னியல் பிரிவு உதவித் துணைத் தலைவர், குப்புசாமி சண்ட்ரகஸ் கூறுகையில், “சீசன் ஒன்றின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்துக் ‘கல்யாணம் 2 காதல்’ தொடரின் இரண்டாவது சீசனின் முதல் ஒளிபரப்பை அறிவிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர உள்ளூர் தமிழ் உள்ளடக்கத்தை வழங்க மேலும் அதிகமான உள்ளூர் தயாரிப்புக் குழுக்கள் மற்றும் திறமையாளர்களுடன் இணைந்துப் பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். அதுமட்டுமின்றி, எங்களின் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் நன்றிக் கூறிக் கொள்கிறோம்” என்றார்.

#TamilSchoolmychoice

புகழ்பெற்ற உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில் மலர்ந்த இத்தொடரில் விகடகவி எனும் மகேந்திரன் ராமன், யுவராஜ் கிருஷ்ணசாமி, மலர்மேனி பெருமாள், பாஷினி சிவகுமார், ரவின் ராவ் சந்திரன், உள்ளிட்டப் பலப் பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 2 வாடிக்கையாளர்களுக்கு மனதைக் கவரும் தருணங்களுடன் சுவாரசியமானக் கதையை வழங்கும். பாக்கியநாதன் (மகேந்திரன் ராமன்) திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் மற்றும் கடந்தக் காலத்தில் நடந்த அனைத்தையும் சரிசெய்து பாக்கியநாதனைக் காப்பாற்றும் வாய்ப்பைப் பெறும் ஹரிஷை (யுவராஜ் கிருஷ்ணசாமி) மையமாகக் கொண்டக் கதை. இருப்பினும், சாமிநாதனின் நியூரான்கள் காப்பாற்றப்பட்டப் பாக்கியநாதனை முழுமையாகக் கையாளுகின்றன.

‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 2 தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.