Home நாடு விக்னேஸ்வரன், அமைச்சர் தகுதியுடன் தெற்கு ஆசியா சிறப்புத் தூதராக நியமனம்

விக்னேஸ்வரன், அமைச்சர் தகுதியுடன் தெற்கு ஆசியா சிறப்புத் தூதராக நியமனம்

982
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் தெற்கு ஆசியா நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அமைச்சர் தகுதியுடன் கூடியதாகும்.

தெற்கு ஆசிய நாடுகள் என்பது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வட்டாரமாகும்.

இதற்கு முன்னர் இந்தப் பதவிக்கு மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலு நியமிக்கப்பட்டிருந்தார். 2010-ஆம் ஆண்டு டிசம்பரில், மஇகா தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர், 2011 ஜனவரி முதல் இந்தப் பதவிக்கு சாமிவேலு நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில்  பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சி அமைந்தபோது, இந்தப் பதவி துன் மகாதீரால் அகற்றப்பட்டது.

நேற்று சனிக்கிழமை (நவம்பர் 13) மலேசிய சுற்றுலாக் கழகம் நடத்திய தீபாவளி சிறப்பு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.