Home உலகம் ஜெர்மனி : புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு

ஜெர்மனி : புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு

871
0
SHARE
Ad
ஓலாப் சோல்ஸ்

பெர்லின் : உலகின் பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியைத் தனது சிறந்த தலைமைத்துவத்தால் வழிநடத்தி வந்த ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகுவதைத் தொடர்ந்து ஓலாப் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

சோஷியல் டெமோக்ரேட் எனும் கட்சியைச் சேர்ந்தவராவார் ஓலாப் சோல்ஸ். 2018 முதல் துணை அதிபராகப் பணியாற்றி வருகிறார் ஓலாப் சோல்ஸ். எதிர்வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அவர் ஜெர்மனியின் புதிய அதிபராக அதிகாரபூர்வமாக  நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியின் தலைமைத்துவ மாற்றத்தைத் தொடர்ந்து ஜெர்மனியின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்படுமா என்ற ஆர்வம் அனைத்துலக வட்டாரங்களில் ஆர்வம் எழுந்துள்ளது.